30.1 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

எதிர்க்கட்சிகளின் திட்டம் நெகிரி செம்பிலான் தேர்தலில் பலிக்காது – டாக்டர் குணராஜ்!

🔥 Views : 3,842
👁 Reading Now : 27

எதிர்க்கட்சிகள் புதிதாக அமைத்துள்ள கூட்டணியின் திட்டங்கள், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றிபெறாது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாக, சிகாமட் தொகுதியில் பல்வேறு இன மக்களைச் சந்தித்து உரையாற்றிய பிரதமர், நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் குணராஜ், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், மாநில மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

எனவே, அவரது தலைமையிலான நம்பிக்கை கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியைத் தொடர வேண்டுமெனவும், அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், எதிர்க்கட்சிகள் தேர்தலை முன்னிட்டு திடீரென கூட்டணி அமைத்துள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு பல்வேறு அரசியல் திட்டங்கள் இருந்தாலும், அவை நெகிரி செம்பிலான் மக்களிடம் எடுபடாது என்றும் டாக்டர் குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles