31.6 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

காரைக்குடியில் ‘ஜனநாயகன்’ திரைப்பட சிறப்புக் காட்சி; கனிமவள அமைச்சர் பிரபு தொடங்கி வைத்தார்!

🔥 Views : 5,917
👁 Reading Now : 29


செய்தி / படங்கள் : எம்.முருகன்
இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, காரைக்குடி பாண்டியன் திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த சிறப்புக் காட்சியை தமிழ்நாடு கனிமவளத் துறை அமைச்சர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக திரைப்படத்தை கண்டுகளித்தனர். திரையரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் விழாக்கோலம் பூண்டது.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரசிகர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பாண்டியன் திரையரங்க நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த சிறப்புக் காட்சி, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், காரைக்குடியில் திரையரங்கு வளாகத்தை விழாக்கோலமாக மாற்றியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles