26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மூன்று மாதங்கள் காத்திருக்க தேவையில்லை

🔥 Views : 5
👁 Reading Now : 35

கோவிட் நோய்த் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் தடுப்பூசி பெறுவதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு குழு கூட்டத்தில் நிபுணர்கள் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
புதிய வகை நோய்த் தொற்றுகளின் பரவலைக் கருத்தில் கொண்டு முன்பு நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத கால இடைவெளிக்கு முன்னதாகவே முன்னாள் கோவிட்-19 நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட முன்னாள் கோவிட்-19 நோயாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles