25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நாய்கள் கொடூர கொலை தொடர்பில் விசாரணையை தொடங்கியது கெடா பொலீஸ்

🔥 Views : 7
👁 Reading Now : 40

ஈவு இரக்கமின்றி நாய்களை கொன்ற கெடா கூலிம் நகராண்மைக் கழக அதிகாரிகள் மீது இரண்டு புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக கெடா மாநில போலீஸ் தலைவர் கமாருல் ஸாமான் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டம் 428 பிரிவின்கீழ் போலீசார் விசாரணை கோப்புகளை திறந்துள்ளனர்.
நாய்களை பிடிக்கும் நடவடிக்கையின்போது அது தொடர்பான சட்டங்கள் மற்றும் எஸ்ஏபி குறித்த அம்சங்களை கண்டறியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாய்களை கொன்றவர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிராணிகள் நல இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எடுக்க தவறினால் அவர்களுக்கு எதிராக அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில் சிவில் ஜம் வழக்கு தொடுக்கப்படும் என்று பிராணிகள் மீட்பு க்கான மலேசிய சுயேட்சை இயக்க வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் எச்சரித்துள்ளார்.
கூலிம் வட்டாரத்தில்
அப்பாவி மிருகங்களை ஈவு இரக்கமின்றி கொன்ற கூலிம் நகராண்மைக் கழக அதிகாரிகள் மீது மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா உட்பட போது மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
நாய்கள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles