
நாட்டை சிறந்த முறையில் வழி நடத்த கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடீன் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ மீட்டுக்கொண்டது.
இதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு 73 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.
கிளாந்தான் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜஸ்லான் யாக்கோப் மற்றும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா ஆகியோர் ஏற்கெனவே பிரதமருக்கு எதிராக தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டனர்.
இப்போது அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தலைமையில் பெரும்பான்மை அம்னோ எம்பிக்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தனிப்பட்ட முறையில் 88 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது.
ஆகவே நாட்டை சிறந்த முறையில் வழி நடத்துவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஒரு தோல்வி கண்ட அரசாங்கமாக இருக்கிறது என்று அவர் சாடினார்.



