
வெளி நோயாளிகளுக்கான சிகிச்சையை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிறுத்தியுள்ளது..
நோய் தொற்று நோய்களிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் ஸூல்கர்னையன் தெரிவித்தார்.
ஜூலை 9-ஆம் தேதி முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வேறுவோரு தேதியை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று அதிகரிப்பால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



