34.1 C
Kuala Lumpur
Friday, August 21, 2026

Vetri

கிள்ளான், சபா பெர்ணம், புக்கிட் பெருந்தோங்கில் மூன்று தடுப்பூசி மையங்கள் திறப்பு

🔥 Views : 25
👁 Reading Now : 33

சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் மூன்று தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.
இந்த மூன்று மையங்கள் மூலம் தினசரி 3,000 முதல் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
கிள்ளானில் உள்ள வைண்ட்ஹாம் ஹோட்டல், சபாக் பெர்ணம் டேவான் துன் அப்துல் ரசாக் மற்றும் புக்கிட் பெருந்தோங், கோல்ப் அண்ட் கன்ட்றி கிளப் ஆகிய இடங்களில் அந்த தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டிருப்பதாகடத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை தினசரி 1 லட்சத்து 35,000 ஆக உயர்த்துவதற்கு இந்த மூன்று மையங்களும் துணை புரியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போது மாநிலத்தில் தினசரி 92,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிய இலக்கை அடைவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளை நாங்கள் பணித்துள்ளோம் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles