33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

நிபோங் திபாலில் குடும்பங்களுக்கு சுபம் கேஸ் அண்ட் கேரி உதவிக்கரம்

🔥 Views : 10
👁 Reading Now : 37

நிபோங் திபால் பகுதியில் சிரமப்படும் பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களுக்கு பினாங்கு மாநிலத்தில் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான சுபம் கேஸ் அண்ட் கேரி நிர்வாகம் உணவுக் கூடைகளை வழங்கியது.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட் -19 நோய் தொற்றுக் காலத்தில் வேலையும் வருமானமும் இன்றி அவதியுறும் குடும்பங்களுக்கு சமையல் பொருட்களை அந்நிறுவனம் கொடுத்து உதவியது.
இங்குள்ள சுற்றுவட்டார தோட்டப்புறங்கள்,நகர்புறங்களைச் சேர்ந்த இந்தியர்,மலாய்க்காரக் குடும்பங்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக சுபம் கேஸ் அண்ட் கேரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முருகேசன் கூறினார்.
இங்குள்ள கலிடோனியா தோட்டம்,பைராம் தோட்டம்,சங்காட் தோட்டம்,திரான்ஸ் கிரியான் தோட்டம்,சுங்கை கிச்சில் தோட்டம்,விக்டோரியா
தாமான் புக்கிட் பஞ்சோர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles