33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

கஷ்டப்படும் டாக்ஸி ஓட்டுனர்களும் வசதி குறைந்தவர்களுக்கு உதவினர்

🔥 Views : 8
👁 Reading Now : 51

கஷ்டப்படும் டாக்ஸி ஓட்டுனர்களும் வசதி குறைந்தவர்களுக்கு உதவினர்

நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானத்தை இழந்திருக்கும் டாக்ஸி ஓட்டுனர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருகிறார்கள்.
மலேசியா மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து தனது சொந்த முயற்சியில் நேற்று 70 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார்.
பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த 70 குடும்பங்களுக்கு இந்த உணவு குறைகள் நேரடியாக வழங்கப்பட்டன.
மலேசியா மக்கள் மக்கள் மன்ற தலைவர் டாக்டர் பாஸ்கரன் மற்றும் மலேசிய மக்கள் கம்யூனிகேஷன்டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் துணைச் செயலாளர் சூரியமூர்த்தி, ராமுலு, சூரியா மற்றும் மகேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட மக்களுக்கு உணவு கூடைகளை எடுத்து வழங்குவதில் உதவி புரிந்துள்ளனர்.
நாங்கள் வருமானத்தை இழந்திருந்தாலும் சில நல்ல உள்ளங்கள் வழங்கிய நன்கொடைகளை கொண்டு 70 குடும்பங்களுக்கு உதவி புரிந்து இருக்கிறோம் என்று முத்து தெரிவித்தார்.
இவ்வேளையில் டாக்டர்
டாக்டர் நெல்சன் முருகன், சுங்கை பட்டாணி குணா மற்றும் வீனஸ் கடை உரிமையாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முத்து தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles