33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சடலங்களை வைக்க கிள்ளான் மருத்துவமனைக்கு கொள்கலன் அன்பளிப்பு

🔥 Views : 14
👁 Reading Now : 64

நோய்த் தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை வைக்க கிள்ளான் தெங்கு
அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு கொள்கலன் ஒன்றை மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வழங்கியுள்ளார்.
கிள்ளான் மருத்துவமனையில் கொவிட் பாதிப்புகளால் நேரும் மரணங்களைத் தொடர்ந்து இறந்தவர்களின் சடலங்கள் வைப்பதற்கு அங்குள்ள பிரேதக் கிடங்கு போதிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை
இதனை கருத்தில் கொண்டு அந்த மருத்துவனைக்கு கொள்கலன் ஒன்று அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்பதை அறிந்து டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்த கொள்கலனை மஇகா சார்பில் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தக் கொள்கலன் கிள்ளான் மருத்துவமனை எதிர்நோக்கும் சிரமங்களை சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்ட பின்னர் இந்தக் கொள்கலனை வழங்குவதற்கு அனுமதி பெற்ற பின்னரே இதனை வழங்குவதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சடலங்களை வைக்க கொள்கலன் வழங்கிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles