27.7 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

ஜெயம் நம்நாடு இயக்கம் வசதி குறைந்த மக்களுக்கு பேருதவி

🔥 Views : 78
👁 Reading Now : 54

சமூகச் சேவையில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் ஜெயம் நம்நாடு இயக்கம் தற்போது வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்று தாக்கம் முதல் இதுநாள் வரை நாடு தழுவிய அளவில் ஜெயம் நம் நாடு இயக்கம் வசதி குறைந்த மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இப்போது கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கும் உணவு கூடைகளை வழங்கியுள்ளது. அந்தவகையில் பாங்கி வட்டாரத்தில் 10 குடும்பங்களுக்கு ஜெயம் நம் நாடு தலைவர் டாக்டர் குமரேந்திரன் பாலகிருஷ்ணன் தலைமையில் உணவு வகைகள் வழங்கப்பட்டன.
கஷ்டப்படும் நேரத்தில் 10 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கிய ஜெயம் நம்நாடு இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக செ.வே. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles