26.8 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

மீட்புநிலை அறிவிப்புக்கு காத்திருக்க தேவையில்லை

🔥 Views : 32
👁 Reading Now : 56

நாட்டை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இப்போதே நடக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தால் கட்டங்கட்டமாக அறிவிக்கப்படும் செய்திகளுக்காகக் காத்திருக்காமல், இதனைச் செயல்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் அக்கிருமி இனி என்றென்றும் நம்முடனேயே இருக்கும் என்ற உண்மையை ஏற்கத் தயாராக வேண்டும் என்றார்.
17 விழுக்காடு தடுப்பூசிகள் போடப்பட்டதும் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
மக்கள் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ளவுமீ வேலை செய்யவும் படிக்கவும் மாவட்ட எல்லைகலைக் கடக்கவும் தெளிவான நெறிமுறையுடன் வியாபாரம் செய்யவுமங அனுமதிக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, இந்தச் செயல்முறைகளைத் தொடங்க வேண்டுமென்று அதிகாரிகள் சொல்லக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles