
பேரா மாநில ஐபிஎப் மகளிர் பகுதித் தலைவி பிரேமாமேரி தலைமையில் துரோங் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
கோவிட் -19 தொற்றின் தாக்கத்தால் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்நோக்கி சிரமப்படும் 40 குடும்பங்களுக்கு இந்த உதவி செய்யப்பட்டது.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணத்தால்,எம்சிஓ விதிகளின்படி வேலை வாய்ப்புகளும்,வருமானமும் குறைந்து தவிக்கும் குடும்பங்களுக்கு,பேரா மாநில அரசாங்கத்தின் உதவியுடன் இப்பொருட்கள் வழங்கப்பட்டதாக பேரா மாநில ஐபிஎப் மகளிர் பகுதித் தலைவி திருமதி பிரேமா மேரி கூறினார்.
ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.லோகநாதனின் சிறப்பான தலைமைத்துவதில்,பேரா மாநில ஐபிஎப் தலைவரும்,தேசிய மத்திய செயலவை உறுப்பினருமான வி.மாணிக்கம் மற்றும் மாநிலப் பொருளாளர் எம்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆதரவோடு மகளிர் பகுதி நல்ல முறையில் செயல்பட முடிவதாக ஐபிஎப் புக்கிட் கந்தாங் தொகுதி மகளிர் பிரிவுத் தலைவியுமான பிரேமாமேரி தெரிவித்தார்.
