33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு சட்டத்துறை தலைவர் வர வேண்டும் துணை சபாநாயகர் வலியுறுத்து

🔥 Views : 10
👁 Reading Now : 54

வரும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத்துறை தலைவர் இட்ரிஸ் ஹருண் கலந்து கொள்ள வேண்டுமென்று துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தற்போது நாட்டில் அமல் படுத்தப்பட்டிருக்கும் அவசரகால உத்தரவு தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் அமைச்சரவைக்கு இவர் சட்ட ஆலோசகராக இருக்கிறார்.
அந்த வகையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு மட்டும் இவர் சட்ட ஆலோசனை இருக்கவில்லை. மாறாக மக்களவை, மேலவை மற்றும் அமைச்சரவை அமைப்பதிலும் இவரின் ஆலோசனை அடங்கி இருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles