
நோய் தொற்றிலிருந்து மலேசியர்கள் விடுபடுவதற்கு விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மேலும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தற்போது நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 92 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே காலம் தாழ்த்தாமல் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.



