27.9 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

கடன் பிரச்சினையால் பாராங் கத்தி சண்டை! கெடாவில் இரு சகோதரர்கள் கைது!

🔥 Views : 28
👁 Reading Now : 35

பூக்கடையில் பாராங் கத்தி ஏந்திய நிலையில் சண்டையிட்டுக் கொண்ட இரு சகோதரர்களை போலீசார் கைது செய்திருப்பதாக கெடா கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் அட்ஸ்லி தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடன் பிரச்சினையால் இந்த சண்டை ஏற்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. விசாரணைக்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் பழைய குற்றப்பதிவு இல்லை. மேலும் போதைப்பொருள் உட் கொண்டிருக்கவில்லை என்பதும் சிறுநீர் பரிசோதனையின் மூலம் தெரியவந்ததாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles