31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஏற்பாட்டில் தடுப்பூசி மையம்; வெளிநாட்டினரும் பயன்பெறலாம்!

🔥 Views : 9
👁 Reading Now : 54

செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் ஏற்பாட்டில் ஷா ஆலம் செக்ஷன் 19, டி பால்மா தங்கும் விடுதியில் ஆகஸ்ட் 4, புதன்கிழமை காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை தடுப்பூசி சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து பயன்பெறுவதற்கு முன் பதிவு அவசியம். எனவே, இத்திட்டத்தில் கலந்து பயன்பெற விரும்புவோர்
https://bit.ly/VaksinDunSentosa Warganegara என்னும் இணையப் பக்கத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டு தடுப்பூசியைப் பெறலாம்.
வரும்போது அடையாள அட்டையையும் பதிவு செய்ததற்கான ஆதாரத்தையும் உடன் கொண்டுவர வேண்டும். வெளிநாட்டினராக இருந்தால் கடப்பிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பதிவு நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 2 கடைசி நாள் என்பதால் இன்றே பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles