
தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது உண்மை என்றால் இப்போதே பிரதமர் நாடாளுமன்றத்தை கூட்டி தனது ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா வலியுறுத்தினார்.
பெரும்பான்மை இருக்கிறது உண்மை என்றால் துணிச்சலாக நாடாஞமன்றத்தை கூட்ட வேண்டும். எதற்காக அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் மற்றும் அம்னோ தலைவர்களும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு இல்லை என்பதை வன்மையாக மறுக்கிறார்கள்.
நாடு நோய்த்தொற்று தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரமும் மோசமடைகிறது..
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தவறிவிட்டது.
அம்னோ எம்பிக்கள் பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டு உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆகவே பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கௌரவமாக விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
