28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தங்க மகன் நீரஜ் சோப்ரா இது சாதனை அல்ல; வரலாறு!

🔥 Views : 10
👁 Reading Now : 34

இந்தியாவின் தடகள வீரரான நீரஜ் சோப்ரா, தோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் எறிந்த போது ஒரு மகத்தான சாதனை படைக்கப்பட்டது.
1896 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு தனி நபர் கூட தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்றதில்லை.
அந்த வரலாற்றை மாற்றி எழுதி ‘தங்க மகனாக’ உருவெடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
கடைசியாக இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் வெள்ளி வென்றவரின் பெயர் நார்மன் பிரிட்சார்ட். பதக்கம் வென்ற ஆண்டு 1900. ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையைப் படைத்தார்.
அதன் பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் 8 முறை இந்திய தங்கம் வென்றது.
2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபில் போட்டியில் தங்கம் வென்று அபினவ் பிந்த்ரா அசத்தினார். அதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளது இந்தியா.
இன்னும் 100 ஆண்டுகள் அல்ல, அதையும் தாண்டி இந்த சாதனை பேசப்படும்.
நீரஜ் சோப்ரா தனக்குப் பின்னால் வந்த பல தலைமுறையினர் பதக்கங்களைக் குவிக்க உத்வேகமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தார் என்று வரலாறு எழுதும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles