
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும்.
இல்லையென்றால் மீண்டும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று லாவான் அமைப்பு எச்சரித்துள்ளது.
நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் தவறிவிட்டது.
இதனால் இப்போது நோய் தொற்றினால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 10,000 ஐ எட்டியுள்ளது.
ஆகவே வரும் 23 தேதிக்குள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக தவறினால் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



