33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

தைப்பிங் பிளேக்கேட் கால்பந்து அணியின் மக்கள் சேவை!

🔥 Views : 5
👁 Reading Now : 35

கால்பந்து எங்களின் விளையாட்டுத்துறை என்றாலும்,தேவைப்படுவோருக்கு உதவுவது எங்களின் சேவை என கருதி,பேரா தைப்பிங் பிளேக்கேட் கால்பந்து அணியினர் சிரமப்படும் இந்தியக் குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கினர்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட் – 19 சம்பவத்தால் வேலையையும்,வருமானத்தையும் இழந்து தவிக்கும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உதவியதாக அணியின் தலைவர் நவப்பிரதாபன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த உதவியைப் பெற்றவர்களில் முன்னாள் கால்பந்து வீரர் கதிர்வேலுவுக்கு உதவிப் பொருள்,500 வெள்ளி நிதியுதவி மற்றும் பிளேக்கேட் கால்பந்து அணியின் பயிற்றுனர் முருகன் முனுசாமி ஆகியோரும் அடங்குவர்.
இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் சிரமப்படும் குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை வழங்குவோம் என சு.நவப்பிரதாபன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles