
கோலாலம்பூர் அனைத்துலக வாணிப மையத்தில் அனைத்துலக புத்தக கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
1,200 புத்தக கூட்டங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையில் உள்ளன .
இதில் ஒரே தமிழ் பதிப்பகம் குயில் ஜெயபக்தி மட்டுமே.
அனைத்துலக புத்தக கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தக கூடங்களுக்கு வந்த போது குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜூ மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் குமாரி பார்கவி அன்போடு வரவேற்றனர்.
அப்போது மும்மொழிகளிலும் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை டத்தோ டாக்டர் செல்வராஜூ பிரதமருக்கு அன்பளிப்பு செய்தார்.
உடனே திருக்குறள் புத்தகத்தை புரட்டி பார்த்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு குறளை வாசித்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



