27.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சமூக ஊடக கணக்கு!” – புதிய விதிமுறையை அமல்படுத்திய எம்சிஎம்சி

🔥 Views : 2,074
👁 Reading Now : 32

மலேசியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் நோக்கில், 2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act 2025) கீழ் குழந்தைகள் பாதுகாப்புக் குறியீடு (CPC) மற்றும் இடர் குறைப்புக் குறியீடு (RMC) ஆகியவற்றை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) அமல்படுத்தியுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகக் கணக்குகளைத் திறந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, பயனர்களின் வயது அரசாங்க ஆவணங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பதிவுகள் மூலம் கட்டாயமாகச் சரிபார்க்கப்பட வேண்டும்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் உள்ளிட்ட உரிமம் பெற்ற சமூக ஊடக தளங்கள் அனைத்தும் வயது சரிபார்ப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்குகள் வைத்திருக்கும் பயனர்களுக்கான வயது சரிபார்ப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

16 வயதுக்குக் குறைவானவர்களாக அடையாளம் காணப்படும் பயனர்களுக்கு, தங்களது புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பிற தனிப்பட்ட தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலக்கெடுவுக்குப் பின்னர் அவர்களது கணக்குகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடக நிறுவனங்கள் இடர் மதிப்பீடு, உள்ளடக்க கண்காணிப்பு, பயனர் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தளப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்றும் எம்சிஎம்சி வலியுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles