27.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

PMX தலைமையில் RM1.14 டிரில்லியன் முதலீடு! – மலேசிய பொருளாதார வளர்ச்சிக்கு புதிய மைல்கல்

🔥 Views : 3,197
👁 Reading Now : 38

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை அளவிலான முதலீடுகளை ஈர்த்து வரும் மலேசியா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மொத்தம் RM1.14 டிரில்லியன் மதிப்பிலான முதலீடுகளை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் RM329.5 பில்லியன், 2024ஆம் ஆண்டில் RM384.4 பில்லியன் மற்றும் 2025ஆம் ஆண்டில் RM426.7 பில்லியன் முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மலேசியாவின் பொருளாதார வலிமையையும், உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த முதலீடுகள் வெறும் புள்ளிவிவரங்களாக இல்லாமல், புதிய வேலைவாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார விரிவாக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தி, தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் மற்றும் உயர் மதிப்புள்ள தொழில்துறைகள் போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், “பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா தொடர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. வலுவான முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும். இது மலேசியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளமாக அமையும்,” என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles