32.3 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

மலேசிய சிலம்பக் கழக தேர்தல்: இரு அணிகளும் சம பலத்துடன் வெற்றி; தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் தேர்வு

🔥 Views : 2,293
👁 Reading Now : 51

மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய பேராளர் மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கிள்ளான் செந்தோசாவில் விறுவிறுப்பான சூழலில் நடைபெற்றது. 16 மாநிலங்களைப் பிரதிநிதித்து 80 பேராளர்கள் கலந்துகொண்ட இத்தேர்தலில் இரு அணிகளும் சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ளன.

நடப்புத் தலைவர் டாக்டர் எம்.சுரேஸ் 43 வாக்குகள் பெற்று தனது பதவியைத் தற்காத்துக் கொண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜொகூர் மாநிலத்தின் சிவன் கிருஷ்ணன் 37 வாக்குகளைப் பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விலாயா மாநில சிலம்பக் கழகத் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் 43 வாக்குகள் பெற்று, கடந்த முறை அடைந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை அதிரடி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த ரகுபதி 37 வாக்குகளைப் பெற்றார்.

நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு மொத்தம் எட்டு பேர் களமிறங்கிய வேளையில், தனபாலன், சுப்பிரமணியம், கமலநாதன், விஜய சேகரன் ஆகியோர் கடும் போட்டிக்குப் பின் வெற்றி வாகை சூடினர்:

ஒன்பது இடங்களுக்கான உச்சமன்ற உறுப்பினர் தேர்தலில் தீவிரப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் புதிய உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

தியாகராஜன், காமினி, லோகநாதன், அருனிஸ்ராவ், வசந்தகுமார், திலகராஜன், ஜெகன், விக்னேஸ்வரி மற்றும் விஜேந்திரன்.
இரு அணிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளதால், கழகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து சிலம்ப வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles