29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

எம்பிகளுக்கு லஞ்சம்; விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவு!

🔥 Views : 27
👁 Reading Now : 67

அரசாங்கத்தை ஆதரிக்க முன் வந்தால் லஞ்சம் தர முன்வந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் கூறினார்.
இது தொடர்பில் போலீஸில் பொய் புகார் செய்பவர்கள் மீதும் லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இதனிடையே பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தால் 3 கோடி வெள்ளி வெகுமதியும் அமைச்சர் பதவியும் காத்துக் கொண்டிருப்பதாக 3 ஜசெக எம்பிக்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் மற்றும் பண்டார் கூங்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் யீ ஆகியோருக்கு குறுந்தகவல் மூலம் அணி மாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles