
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை நிராகரிக்கிறோம் எனக்கூறி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 105 எம்பிக்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.
நேற்று அம்னோ கட்சியை சேர்ந்த 14 எம்பிக்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று மாமன்னரிடம் கடிதங்களை ஒப்படைத்தனர்.
மேலும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னியும் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரையும் சேர்த்து மொத்தம் 15 அம்னோ எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சி வரிசையில் ஜசெக 42, அமானா 11, கெஅடிலான் 35, வாரிசான் 8, பெர்ஜூவாங் 4, பார்ட்டி சரவா பெர்சத்து 2, சைட் சாடிக் மற்றும் மஸ்லி மாலிக் 2, உப்கோ 1 ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் 15 அம்னோ எம்பிக்கள் மற்றும் 105 எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமருக்கு எதிராக இருக்கிறார்கள்.
ஆக மொத்தம் 120 எம்பிக்கள் தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தி உள்ளனர்.
இப்போது பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கு வெறும் 100 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதால் அவர் பெரும்பான்மையை இழந்திருக்கிறார்.
