
உலக அரசியல் அரங்கில் ஒரு மாபெரும் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது 74 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.
பல சோதனைகளையும் வேதனைகளும் தாங்கி இன்னமும் மலேசிய அரசியல் அரங்கில் ஒரு மாபெரும் தலைவராக இவர் வலம் வருகிறார்.
2018 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
துன் டாக்டர் மகாதீருக்கு பின்னர் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்க காத்திருந்த வேளையில் நம்பிக்கை துரோகிகளினால் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை பறிகொடுத்தது.
பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இன்று ஆட்டம் கண்டிருக்கும் வேலையில் இனி எந்த நேரத்திலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் அமையலாம் என்று மலேசியர்கள்ள பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு பக்காத்தான் ஹரப்பான் எம்பிக்கள், தலைவர்கள் தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
