33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

உங்களுக்கு பதிலாக தேர்தலில் போட்டியிட நிறைய வேட்பாளர்கள் இருக்கிறார்கள்

🔥 Views : 11
👁 Reading Now : 28

அம்னோ கட்சியின் உத்தரவை மதிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஏராளமான வேட்பாளர்கள் தயாராக இருப்பதாக அம்னோ இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
வரும் பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட ஏராளமான வேட்பாளர்கள் தயாராக இருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் என்று எச்சரித்தார்.
அம்னோ சார்பில் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை இல்லை என்று யாரும் முடிவு செய்துவிடாதீர்கள்.
உங்களுக்கு பதிலாக திறமையான வேட்பாளர்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை இதுவரை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டார்கள்.
அம்னோ உச்சமன்றத்தின் முடிவை மதிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறி உள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles