
புக்கிட் மெர்தாஜாம் அல்மா ரப்பர் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடா
முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுக்
காணப்பட வேண்டுமென தாம் எதிர்ப்பார்ப்பதாக பினாங்கு மாநிலத் துணை
முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.
தற்போது நீதிமன்ற ஆணையுடன் ஆலயத்தை உடைக்க நில உரிமையாளர் மேற்கொண்டுள்ள
நடவடிக்கையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
ஆலயத்தை உடைக்கக்கூடாது எனக் கோரி,இப்பிரச்சனைக்கு நியாமான தீர்வு கிடைக்க செபராங்
பிறை மாநகர் மன்றம்,மத்திய மாவட்ட நில மற்றும் நில அலுவலகம்
ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சொன்னார்.
இதற்கு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியமும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் யாரும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செய்லபடக் கூடாது என கூறிய
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான டாக்டர்
பி.இராமசாமி,பினாங்கு மாநிலத்தில் இந்து ஆலயங்கள் உடைபடும் என்ற
பேச்சுக்கே இடமில்லை என உறுதியாகக் கூறினார்.
அல்மா தோட்ட ஸ்ரீ ஜடா
முனீஸ்வரர் ஆலயம் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.



