31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

புதியப் பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! மாமன்னர் உத்தரவு

🔥 Views : 36
👁 Reading Now : 28

அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப தாம் நியமிக்கும் புதிய பிரதமர் விரைவில் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டின் அடுத்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நேற்று நடைபெற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வெற்றி பெற்றவர் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற போக்கை ஒதுக்கிவிட்டு அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles