26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடுவதால் நெகிரியில் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைகிறது

🔥 Views : 9
👁 Reading Now : 63

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மக்களுக்கு அதிக அளவில் விரைந்து தடுப்பூசி போடப்படுவதால் நோய்த்தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் நெகிரி மாநிலத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்தொற்று எண்ணிக்கை பதிவானது.
ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்து இருக்கிறது என்று அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 85 விழுக்காடு மக்களுக்கு முதல் தடுப்பூசியும் 66 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.
மாநில அரசாங்கத்தின் சார்பில் 100 தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் துறை மருத்துவமனையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீட்டிலேயே சென்று தடுப்பூசி போடப்படுகிறது. தோட்டப்புற மற்றும் பெல்டா குடியேற்றக்காரர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக எஸ்டி செய்தி நிறுவனத்திடம் வீரப்பன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles