29.5 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேர்வு

🔥 Views : 7
👁 Reading Now : 38

நாட்டின் 9ஆவது பிரதமராக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் நாளை மாலை 2.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 2.30 மணிக்கு தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் கூட்டம் மாலை 4 .30 மணியளவில் முடிவடைந்தது.
இக்கூட்டத்தில் ஜோகூர் சுல்தான், கிளாந்தான் சுல்தான் மற்றும் பெர்லிஸ் ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியர்கள் கூட்டத்தில் சிலாங்கூர், பேரா, திரெங்கானு, கெடா, பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் யாங் டி பெர்த்துவான் பெசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles