29.5 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு நிபந்தனையுடன் ஆதரவு!

🔥 Views : 7
👁 Reading Now : 28

அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்கள் நிபந்தனையுடன் கூடிய சத்திய பிரமாண ஆதரவை வழங்கி இருப்பதை பாஸ் பேரவை மன்றத்தலைவர் செனட்டர் என். பாலசுப்பிரமணியம் வரவேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான 50 எம்பிக்கள் நிபந்தனையுடன் கூடிய சத்திய பிரமாணத்தை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்று பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்கள் எடுத்துள்ள முடிவு சரியானதாகும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles