29.5 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதா?

🔥 Views : 6
👁 Reading Now : 50

முதலாம் கட்ட மீட்சி திட்டத்தில் உள்ள உணவகங்களில்
இரண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் அமர்ந்து சாப்பிடலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் வாடிக்கையாளர் மேஜையில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதா என்பது குறித்து இன்னும் பெரும்பாலான உணவகங்கள் முடிவு எடுக்காமல் உள்ளன.
நோய் தொற்று அபாயம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான உணவகங்கள் பெரும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பது தொடர்பில் உணவகங்கள் சற்று பொறுமை காத்து வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles