
எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளருக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பெர்ஜூவாங் கட்சி சார்பில் 4 எம்பிக்கள் சத்தியப் பிரமாணம் துடன் ஆதரவு வழங்கினார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
பெர்ஜூவாங் சார்பில் 4 எம்பிக்கள் அவருக்கு முழு ஆதரவை வழங்கினர்.
ஆனால் அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை.
பிரதமர் பதவி கிடைக்கும் வரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து போராடுவார்.
தனக்கு வெற்றி கிடைக்கும் வரை போராடும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
நாட்டின் 9 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அனுபவம் இல்லாதவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
