34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாறன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்!

🔥 Views : 7
👁 Reading Now : 61

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் .
அவருடன் சென்ற சக நண்பரான மியான்மார் ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நேற்று மாலை பிறை அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயது மாறன் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டது
.சம்பவத்தின் போது இவரும்,இவரின் மியான்மார் நண்பரும் இங்குள்ள ஆறு ஒன்றில் வலையைக் கட்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட கடுமையான நீர் பெருக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மாறன் நீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
இவரை காப்பாற்ற முயன்ற நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles