34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

எங்களுக்கும் உதவுங்கள் பினாங்கு அனைத்துலக விமான நிலைய கார் ஓட்டுனர்கள் கோரிக்கை

🔥 Views : 5
👁 Reading Now : 56

நோய்த் தொற்றினால் நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளால் தங்களின் வருமானத்தையும்,வேலையையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு அரசாங்கங்கள் உதவ வேண்டுமென லிமோஸின் எனப்படும் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் கார் ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில் விமானப் பயணிகள் இல்லாதக் காரணத்தால்,கார்கள் பயணிகளை ஏற்ற முடியாமல் நின்றுப் போய் கிடக்கிறது.
இந்த சமயத்தில் வாடகைக் கார்,ரிக் ஷா ஓட்டுனர்களுக்கு பல்வேறு உதவிகளையும்,சலுகைகளையும் வழங்கி வரும் மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கம் எங்களுக்கும் அதுபோன்ற உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
நோய்த்தொற்று பிரச்சனை தொடங்கிய இந்த ஈராண்டு காலத்தில் எங்களைப் போன்ற பொது வாகனமோட்டுவோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தின் பயணிகளை தவிர்த்த ,மற்ற வாடகைக் கார்களைப் வெளியில் பயணிகளை நாங்கள் ஏற்ற முடியாது,
இது பினாங்கு அனைத்துலக விமான நிலைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிமோஸின் சங்கத்தின் விதிமுறையாகும் என தெரிவித்தனர்.
முன்பு சுமார் 300 கார் ஓட்டுனர்கள் இருந்தனர்.எந்தவொரு வருமானமும்,உதவியும் இல்லாததால் பலர் வேலையிலிருந்து விலகி விட்டனர்.
தற்போது சுமார் 150 கார் ஓட்டுனர்கள் மட்டுமே இருப்பதாக,பினாங்கு மாநில உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் கழகத்தின் தலைவர் முகமது நசீர் முகைதீன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles