34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இது ஒரு கண்துடைப்பு நாடகம்; மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்!

🔥 Views : 8
👁 Reading Now : 38

தேசிய மீட்சித் திட்டத்தில் இணையும்படி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார்.
முன்பு இருந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கும் இப்போது புதிய பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அரசாங்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆகவே புதிய பிரதமரிடம் இருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.
இந்த அரசாங்கம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பது தெரியாது.
தேசிய மீட்சித் திட்டத்தில் இணையும்படி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு எடுக்கப்பட்டிருப்பது ஒரு கண்துடைப்பு நாடகமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதை நம்பி எதிர்க்கட்சிகள் ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி நாம் முன்னேறுவோம்.
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு குறுகிய காலமே இருப்பதால் நாம் அதில் தீவிர கவனம் செலுத்துவோம் என்று எதிர்க்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles