
கடந்த சில தினங்களாக பேரா மாநிலத்தில் பல மாவட்டங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வெள்ள நிலைமையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.
நேற்று மாலையில் இருந்ததுப் போலவே 66 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 241 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
கடந்த வாரம் தொடங்கி பெய்து வரும் அடைமழையால் கிரியான் மாவட்டத்தில் சங்காட் லோபாக் தேசியப்பள்ளி, அலோர் பொங்சு தேசியப் பள்ளி, லாருட் மாத்தாங் தேசியப் பள்ளியில் செலாமா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இன்னும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக பேரா மாநில பேரிடர் நிர்வாகக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உணவுகள் உட்பட பல உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.



