34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாதுகாவலர் தவசகாயம் மரணம் தொடர்பில் தாக்கிய ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டை சுமத்துங்கள்!

🔥 Views : 6
👁 Reading Now : 53

ஈப்போவில் பாதுகாவலர் தேவசகாயம் மரணம் தொடர்பில் அவரை கண்மூடித்தனமாக தாக்கிய நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
இவரை தாக்கிய ஆடவர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சாதாரண குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர் தாக்கப்பட்டதால் பாதுகாவலர் தேவசகாயத்திற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. எட்டு மாதங்களுக்கு பின்னர் இவர் குணமடையாமல் மரணம் அடைந்திருக்கிறார்.
ஆகவே பாதுகாவலர் தேவசகாயம் மரணம் தொடர்பில் அவரை தாக்கியவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேவசகாயத்தின் மனைவி பிலோமினா என் சட்ட உதவியை நாடி இருக்கிறார்.
இவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
இதனிடையே கடுமையாகத் தாக்கப்பட்டதால் இவர் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நுரையீரலில் கிருமி தொற்றியதால் மரணமடைந்ததாக கூறப்படுவதை குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள கொள்ள மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles