34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் படுகொலை; இந்திய ஆடவன் கைது

🔥 Views : 9
👁 Reading Now : 66

மாது ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து,அவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக நம்பப்படும் 35 வயது இந்திய ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி,தாமான் செருலிங் இமாஸில் நிகழ்ந்தது.
புகாரைப் பெற்று இரவு சுமார் 7 .25 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டின் அறையொன்றில் கட்டிலுக்கு அடியில் 40 லீ லிங் தீ எனும் மாதுவின் உடலை கண்டதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் கூறினார்.
சம்பவத்தில் உயிரிழந்த மாது பாலியல் பலாத்காரத்தின் போது போது கூச்சலிட்டதால் அவரில் வாயில் துணியை வைத்து மூடியதால் அவர் மூச்சடக்கி உயிரிழந்ததாக சொன்னார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 3 .00 மணியளவில் நிகழ்ந்திருக்கலாம் என அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் இதே பகுதியைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய ஆடவனை கைது செய்ததாக ஓசிபிடி மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles