25.7 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

விமானத்தில் பிரசவம்: 30 ஆயிரம் அடி உயரத்தில் ஆப்கன் அகதிக்கு பெண் குழந்தை பிறந்தது

🔥 Views : 23
👁 Reading Now : 33

ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர், பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார்.

சொமன் நூரி என்கிற 26 வயது ஆப்கானிஸ்தான் பெண், துபாய் நகரத்தில் இருந்து, பிரிட்டனில் இருக்கும் பெர்மிங்ஹாம் நகருக்கு மக்களை மீட்டு வரும் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது.
அந்த விமானத்தில் மருத்துவர் யாரும் இல்லை. எனவே விமான பணியாளர்கள் சேர்ந்து, சொமன் நூரிக்கு பிரசவம் பார்த்தனர்.
பின்னர்
சொமன் நூரி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு ஹவா என்று பெயரிட்டுள்ளனர்.
தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles