29.6 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆடவனுக்கு 7 நாள் தடுப்புக்காவல்

🔥 Views : 5
👁 Reading Now : 20

போதைப் பொருள் உட் கொண்ட நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான ஆடவரை 7 நாட்கள் தடுத்து வைக்க போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர்.
பினாங்கு நிபோங் திபால் தாமான் செருலிங் என்ற இடத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்ட ஆடவன் பின்னர் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்துள்ளான்.
அந்தப் பெண் மரணமடைந்ததை தொடர்ந்து அவரின் சடலத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்து ஆடவன் தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவனை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
29 வயதான இந்த ஆடவனை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றிருப்பதாக செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் லீ சோங் செர்ன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles