31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து விநியோகம் துண்டிக்கப்படவில்லை

🔥 Views : 27
👁 Reading Now : 39

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளி களுக்கான மருந்து விநியோகம் முற்றாக துண்டிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் மருந்து தேவை அபரிமிதமாக அதிகரித்த காரணத்தால் மருந்து விநியோகிப்பாளர்களிடமிருந்து அவை கட்டங் கட்டமாக பெறப்பட்டு வருவதாக அது கூறியது.
பல்வேறு அணுகுமுறைகளின் வாயிலாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று அறிவித்தார்.
மலேசியா மற்றுமின்றி உலகின் பல நாடுகளிலும் கோவிட்-19 பெருந்தொற்று திடீரென அதிகரித்த காரணத்தால் சிகிச்சையளிக்கு பயன்படும் மருந்துகளுக்கான தேவை அதிகளவு அதிகரித்ததாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles