26.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

அமைச்சர்களை அதிகரித்து இந்திய சமுதாயத்தின் ஏமாற்றத்தை தீர்க்க வேண்டும்

🔥 Views : 16
👁 Reading Now : 62

அம்னோ அரசாங்கமா அல்லது தேசியக் கூட்டணி அரசாங்கமா என்ற நிலை தெரியாமல்,புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இந்திய சமுதாயத்துக்கு பெரும் ஏமாற்றமே என மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் வீ.ராய்டு தெரிவித்தார்.
இந்நாட்டில் இந்திய சமுதாயம் பல்வேறு துறைகளில் ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறது.
அதனை கருத்தில் கொள்ளாமல் மஇகாவுக்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு எத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் ? இந்தியர்களின் தலையாய பிரச்சனைகளாக கல்வித்துறை ,விளையாட்டுத்துறை,
பொருளாதாரத்துறை உள்ளது.
இதனை சிறந்த வழிகளைக் காண அமைச்சர் பதவிகளை கூடுதலாக அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டுமென்றார்.
எனவே மஇகா,தனிநபர்கள்,
அரசுசாரா இயக்கங்களின் மூலமாக 2 முழு அமைச்சர்கள்,4 துணை அமைச்சர்களை இந்திய சமுதாயத்துக்கு அரசாங்கம் வழங்க வேண்டுமென வீ.ராய்டு கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles