33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பினாங்கு சிலம்பப் போர்கலைக் கழகத்துக்கு “சோழர் உலக சாதனை விருது”

🔥 Views : 8
👁 Reading Now : 65

பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைகளை படைக்கும் தரப்புகளை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற சோழர் உலக சாதனை விருதினை பினாங்கு மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகம் வென்று அசத்தியுள்ளது.
இணையம் வாயிலாக நடப்பட்ட இப்போட்டியில் சிலம்பக் கலையின் திறமைகளையும்,சிறப்புகளையும் இவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
12 மணி நேரம் காணொளி வாயிலாக இப்போட்டி நடைபெற்றதாக பினாங்கு மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகத்தின் பயிற்றுனர் மாஸ்டர் கவிக்குமார் இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
25 நாடுகளிலிருந்து மொத்தம் 1,200 பேர் கலந்துக் கொண்டனர்.
மலேசியாவிலிருந்து130 பேர் கலந்துக் கொண்டனர். இதில் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து 12 போட்டியாளர்கள் பங்கேற்றதாக அவர் சொன்னார்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு “உலக சோழர் சாதனை விருதுக்கான” சான்றிதழை பினாங்கு சிலம்பப் போர்கலைக் கழகத்தின் புரவலர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் எடுத்து வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles