24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

பத்து காவான் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் பொருளுதவி!

🔥 Views : 18
👁 Reading Now : 41

ஆலயங்களும் மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தென் செபெராங் பிறை பாத்து காவானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மலைக் கோவில் நிர்வாகத்தினர் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உணவுக்கு கூடைகள் வழங்கினார்.
பத்து காவான் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் வசதியற்ற 50 குடும்பங்களுக்கு தலா 150 வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை வழங்கியதாக ஆலயத்தின் செயலாளர் கார்த்திகா வீரமுத்து தெரிவித்தார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குடும்பங்களும் பி40, மாற்றுத் திறனாளிகள் மற்றும் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எந்தவொரு வேற்றுமையும் பாராமல் மூன்று சமூகத்தினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டதாகவும்,நேரில் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு ஆலய இளைஞர் பிரிவினர் வீடு தேடிச் சென்று பொருட்களை ஒப்படைத்தனர்.
இனி வரும் காலங்களிலும் சிரமப்படுவோரின் நிலையை அறிந்து தொடர்ந்து உதவிகளை வழங்க ஏற்படுகள் செய்யப்படுமென ஆலயத் தலைவர் குணா மற்றும் துணைத் தலைவர் சிவபெருமாள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles