
எஸ்ஓபி நடைமுறைகளுடன் ஈப்போ மாநகர் மன்றத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து இரவு சந்தைகளுக்கும் செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ ருமாய்சி பஹாரின் கூறினார். இருப்பினும் இந்த அனுமதி தேசிய பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றார். இரு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிப்பவர்கள் மட்டுமே இரவு சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். ஒரு குடும்பத்திலிருந்து இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறிய அவர் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இரவு சந்தைக்குள் இருக்க முடியும் என்றார்.
