28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தேசிய மறுசீரமைப்பு – மலேசியாவுக்கு ஒரு மாற்று வழி! மக்களின் கோரிக்கை எளிதானது – பிஎஸ்எம் கட்சி பரிந்துரை

2020 இல் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கியதிலிருந்து மலேசியாவின் நிர்வாகக் கட்டமைப்பும், சமூக -பொருளாதாரம் மற்றும் அரசியலும் மிக மோசமாக பலவீனங்கள் அடைந்திருக்கிறது. தற்போது உள்ள அரசு இந்த தொற்றுநோய் காலத்தில் பெரும்பான்மை மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. பெருநிறுவன மற்றும் முதலாளித்துவ சார்பு முறை மற்றும் பாணியிலான, ஆட்சி பல ஆண்டுகளாக சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணங்களால் பல்வேறு சமூக -பொருளாதார அழுத்தங்களுக்கு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். நாம் ஒற்றுமையாக இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல், இந்தக்காலத்தில் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். தேசிய மறுசீரமைப்பு என மட்டுமே மலேசியாவுக்கு மாற்று வழி என்று பிஎஸ்எம் கட்சி சில பரிந்துரைகளை செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles